இன்று பங்குச்சந்தை மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

Siva

புதன், 14 பிப்ரவரி 2024 (13:04 IST)
நேற்று முன்தினம் பங்குச்சந்தை பெரும் அளவில் சரிந்ததால் லட்சக்கணக்கில் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தை சரிந்து நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியது முதலில் சரிவில் இருந்தது என்பதும் சற்று முன் 225 புள்ளிகள் சரிந்து 71 ஆயிரத்து 366 என்ற புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகம் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 55 புள்ளிகள் சரிந்து 21, 689 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச் சந்தை தொடர்ந்து இறங்கி வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் வருங்காலத்தில் பங்குச்சந்தை உயரும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, கோல்ட் பீஸ், ஐடி பீஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் மணபுரம் கோல்ட் ,கரூர் வைசியா வங்கி, ஐடிசி, பேங்க் பீஸ், ஆகியவை உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
ALSO READ: இன்று ஒரே நாளில் சுமார் 500 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்