சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு.. தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி..!
வெள்ளி, 3 நவம்பர் 2023 (11:02 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிந்து கொண்டே இருந்த நிலையில் நேற்று பங்கு சந்தை சற்று உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் 400 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய போது மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்றத்தில் இருந்த நிலையில் சற்றுமுன் 445 புள்ளிகள் உயர்ந்து 64,520 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 138 புள்ளிகள் உயர்ந்து 19,270 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பங்குச் சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு சற்றே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது