ஒரு வாரத்தில் உச்சம் சென்ற பங்குச்சந்தை இன்று சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva

செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (09:37 IST)
கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச் சந்தை படிப்படியாக உயர்ந்து உச்சத்தை எட்டிய நிலையில், இன்று சற்றே பங்குச்சந்தை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்குச்சந்தை  வர்த்தகம் சற்றுமுன் ஆரம்பித்த நிலையில், மும்பை பங்குச்சந்தை  சென்செக்ஸ் 50 புள்ளிகள் சரிந்து, 84,880 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை  நிப்டி வெறும் 10 புள்ளிகள் சரிந்து, 25,930 என்ற புள்ளியில் வர்த்தகமாகிறது.

ஒரு வாரத்துக்குப் பின் பங்குச் சந்தை சரிந்தாலும், அது மிகவும் குறைவான அளவில் குறைந்துள்ளது. எனவே, இன்று மாலை மீண்டும் பங்குச் சந்தை உயர வாய்ப்புள்ளதாகவும் பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி, வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது டன், ஸ்டேட் வங்கி, மாருதி, கோடக் வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி. வங்கி, உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்