நேற்று நஷ்டமடைந்த முதலீட்டாளர்களுக்கு இன்று ஆறுதல்.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva

செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (10:25 IST)
நேற்று இந்திய பங்குச் சந்தை மிக மோசமாக சரிந்து முதலீட்டாளர்களுக்கு சுமார் 17 லட்சம் கோடி நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று ஓரளவுக்கு பங்குச்சந்தை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. 
 
நேற்று சென்செக்ஸ் 2200க்கும் அதிகமான புள்ளிகள் குறைந்த நிலையில் இன்று காலை சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. சற்றுமுன் சென்செக்ஸ் 747 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 503 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 226 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 240 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் எச்டிஎப்சி வங்கி, ஹிந்துஸ்தானி லீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட சில பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன 
 
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நேற்றைய சரிவு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்றைய உயர்வு சிறிய ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இன்னும் 1500  புள்ளிகள் உயர்ந்தால் மட்டுமே முதலீட்டாளர்கள் தங்களுடைய நஷ்டத்தை ஈடுகட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்