வரலாற்றில் முதல்முறையாக ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Siva

வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (11:29 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் மிகப் பெரிய அளவில் உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பாக தங்கம் விலை ஒரு சவரன் 55 ஆயிரத்தை நெருங்கி விட்டதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை 55 ஆயிரத்தை தெரிவித்துள்ளதா பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து ரூபாய் 6,890 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 440 அதிகரித்து   ரூபாய் 55,120 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,360 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,880 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 90.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்