நீண்ட இடைவெளிக்கு பின் உயர்ந்தது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (10:05 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்து கொண்டே வந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் இருந்தனர் என்பதும் நேற்று கூட பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 235 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 740 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 70 புள்ளிகள் உயர்ந்து 19,600 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இனி படிப்படியாக பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவும் அடுத்தடுத்து பங்குச்சந்தை உச்சத்திற்கு செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்