இன்றும் உயர்ந்த பெட்ரோல் & டீசல் விலை!

சனி, 17 ஜூலை 2021 (08:25 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

 
பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தாண்டி ரூ.110ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் அதேபோல் டீசல் விலை ரூபாய் 100ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.49,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.39-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்