ஆப்பிள், டுவிட்டரை பின்னுக்கு தள்ளிய பேஸ்புக்

வியாழன், 28 ஏப்ரல் 2016 (17:34 IST)
ஆப்பிள் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மத்தியில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 3 மடங்கு உயர்ந்துள்ளது.


 


மொபைல் பயன்பாடு மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் மூன்று மடங்கு உயர மொபைல் செயலி காரணமாய் அமைந்தது. இதையடுத்து, மக்களிடையில் ஸ்மார்ட் போனில் இனையதளம் பயன்பாடு அதிகரித்து வருவதால் குகூள், டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் சிறு திரைகளைக் கொண்டு வருவாய் ஈட்டுவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உலக பங்குச் சந்தையில் முதல் மூன்று இடங்களில் இருந்த ஆப்பிள், மைக்ரோசாப்ட், குகூள் ஆகிய நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஃபேஸ்புக் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது ஃபேஸ்புக் நிறுவனம் எதிர்பார்த்ததை விட 9% அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளதாக, அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்