தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதி மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதிமுக சார்பில் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அவர் அறிவித்தார்.
மேலும் கூட்டணி தொடர்பான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று பிரேமலதா கூறி இருந்த நிலையில், தேமுதிகவுக்கான தொகுதிகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் அதிமுக தேமுதிக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.