அவமானம், அலட்சியம் கடந்தால் வெகுமானம் நிச்சயம்! தன்னம்பிக்கை கட்டுரை!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (23:12 IST)
ஆங்கிலத்திலும், தமிழிலும் எதுகை மோனையிலும் எழுதும் ஆற்றல் கொண்டிருந்தவரும், பத்திரி கையாளருமான எழுத்துச் சித்தர் வலம்புரி ஜான், தன் சிறு வயதில் ஒருவரின் வீட்டில் Indian Express என்ற நாளிதழைப் படிப்பதற்க்காக அவர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அந்த ஊரில் அவர் வீட்டில் மட்டும்தான் அந்த ஆங்கில நாளிதழ் வந்துகொண்டிருந்தது.

அவரிடம் சென்று தான் திண்ணையில் உட்கார்ந்து படிப்பதாகக் கூறியுள்ளார், அதற்கு அவரோ, நீ போய் பெட்டிக்கடைலுள்ள தினத்தந்தி வாங்கி சிந்துபாத் கதையப் படி என ஆங்கிலம் உனக்கு எதுக்கு? என்ற அலட்சியத்துடன் வலம்புரி ஜானை அவமானப்படுத்திப் பேசியுள்ளார்.

அந்த இடத்தில் தன் தன்மானத்திற்கு இழுக்கு வந்ததாகக் கருதிய வம்புரி ஜான், அன்றிலிருந்து ஆங்கிலம் கற்றுக்கொண்டு சிறந்த ஆங்கிலப் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் மாறி, தன்னைத் தேய்த்து, அறிவில் வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்தில் அவர், அதே நபரை ஒரு விழாவுக்கு அழைத்து, இதைக்குறிப்பிட்டு பேசினார்.
 

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீது , சட்டமன்றத்தில்,  திமுக ஆட்சியின்போது ஒரு   வன்முறை சம்பவம் நடந்தது, இதையடுத்து அவர் மீது, எத்தனையோ விமர்சனம் இருந்தாலும், ஆண்கள் அரசியலில் கோலோட்சிக் கொண்டிருந்த தமிழகத்தில் அவர் தொடர்ந்து முயற்சி செய்து, கட்சியைக்கட்டுக்கோப்பாக   பல ஆண்டுகளாக வழி நடத்தி 1991 – 96 வரை முதன் முதலாக முதல்வராகப் பதவியேற்றார். அவர் 2016 ஆம் ஆண்டு இறக்கும்போது, முதல்வராகவே இறந்தார்.

சமீபத்தில்  ஒரு நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்பி, தனக்குப் பிடித்த இரும்புப் பெண்மணியாக ஜெயலலிதாவாகக் குறிப்பிட்டிருந்தார். இதுதான் அவரது வெற்றி.

இதேபோல் என் வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்தது.

நான் பள்ளியில் 7 ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு விடுதில் கட்டுரைப் போட்டிக்காக சிலரை தேர்வு செய்தார் விடுதி காப்பாளர். நானும் நன்றாக எழுதுவேன் என்று கூறினேன். என் கோரிக்கை குப்பையில் வீசப்பட்டது. அழுதுபுரண்டேன்.

கையெழுத்து அழகாக எழுதும் நானோ வேதனையில் புழுபோல் துடித்தேன். காப்பாளரின் அலட்சியத்தால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என அந்தச் சர்வாதிகாரி வார்டனை மனதில் திட்டினேன்.

அந்தச் சம்பவம்தான் என்னையும் நாள்தோறும் எழுதச் செய்தது. கையெழுத்தை மெருகேற்றியது. புத்தகங்கள் படித்து, அறிவுச் செழுமையுடன் எழுத்துகளைத் தீட்ட எனக்குக் கற்றுக்கொடுத்தது.

பிறது அலட்சியத்தையும் அவமானப்படுத்துதலையும் கண்டு மனமுடையாமல், இநம்மை நாமே புதியதாக வார்த்தெடுத்துச் செதுக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பாக   எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவமானத்தை அவமானமாக எடுத்துக் கொள்ளாமல் அதையொரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டால் தினம் ஒரு மனிதனாக  நம்  முயற்சிகளினாலும், செயல்களினாலும்  நம்மை நாமே பண்படுத்திக் கொள்ளலாம்.

இருக்கும் ஒரு வாழ்வில், நாம் எப்படி இருக்கிறோம் என்பதை மற்றவர்கள் எப்படித் தீர்மானிப்பது?

நமக்கான எதிர்காலத்தை  நாமே  நிர்ணயிக்க முயலாமல் அடுத்தவர்களின் பேச்சையும் விமர்சனத்தையும்  நம்புவது சரியாகுமா?

நடைமுறை வாழ்வில் யாருக்குத்தான் அவமானம் இல்லை; யார் மீதுதான் அலட்சியப் பார்வை விழாமல் இருந்ததுள்ளது.

முன்னாள் முதல்வர் அண்ணா இறந்தபோது,  கலைஞர் கருணாநிதி  தன்  கட்சியினருக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில், கட்சிக்குத் தலைமை ஏற்ப நான் இருக்கிறேன். என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள்  என்ற சரித்திரப் புகழ்பெற்ற கடிதம் எல்லோருக்கும் தெரியும்!

ஆனால், கலைஞர், அந்தப் பதவிக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் முதன்மையானவர் பேராசிரியர் அன்பழகன். கருணா நிதியை அடுத்த திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுத்தால்,  என்னை என் மனைவியே கூட மதிக்காது என்று தெரிவித்தார்.
 

அதன்பின்,  நடந்தது என்ன? கலைஞர் முதல்வராகவும், கட்சிக்குத் தலைமைட்யேற்று தலைவரானார்., அப்போதில் இருந்து எமர்ஜென்சி, காலம் நிலை; எம்ஜி.ஆர் ஆட்சியில் இருந்த காலம்; அதன் பின் ஏற்பட்ட வெற்றி – தோல்வி என அனைத்துக் காலத்திலும் இணைபிரியாத தோழர்களாகவே கலைஞரும் – பேராசிரியரும் இருந்தனர்.

கலைஞர் கருணாநிதிக்கு இருந்த அதே தன்னம்பிக்கையும் மன வலிமையும் தான் அவரை இறுதிக்காலம் வரை திமுகவின் தலைவராகவே வைத்து அழகுபார்த்தது. அவரது ஆளுமையையும் அவரது கட்சியினர் ஏற்றுக்கொண்டனர்.  தமிழகத்தில் 5 முறை முதல்வர் பதவியேற்றவர் என்றும்,  13 சட்டமன்ற தேர்தலில் ஒருமுறை கூட தோல்வியுறாதவர் என்ற சாதனையும் பெற்றார்.

அவமானங்களையும் அலட்சியங்களையும் தாண்டித்தான் பல  வெற்றியெனும் வெகுமானம் காத்திருக்கிறது நமக்கு!
 
#sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்