மேலும், இதற்கு முன்பு அவர் நடித்த படங்கள் தமிழில் தயாராகி தெலுங்கிற்கு டப்பிங்காகி வந்த நிலையில், இந்த ப்ரதர் என்ற தலைப்பில் தொடங்கும் படம் தமிழ், தெலுங்கில் நேரடியாகவே தயாராகிறது.
இந்த நிலையில் தான் நடிப்பதற்காக நான்கு கதைகள் கேட்டு ஓகே பண்ணி வைத்திருந்தார் வெற்றி ஆண்டனி. இப்போது அந்த கதைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அந்தந்த டைரக்டர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளார். அதனால் அந்த கதைகளில் திருத்தம் செய்யும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. குறிப்பாக, பெக்கர் படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் எதிபார்த்தபடி வெற்றிபெறவில்லை என்பதும் இந்த கதை திருத்தத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.