பெட்ரோல் விலை உயர்வு இல்லை - ஜெய்பால் ரெட்டி

வெள்ளி, 7 செப்டம்பர் 2012 (12:33 IST)
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படவுள்ளது அதுவும் இன்று இரவு முதல் அமலாகிறது என்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி இப்போதைக்கு விலை உயர்வு இல்லை என்று திட்டவட்டமாஅக தெரிவித்தார்.

"உடனடியாக பெட்ரோல், சமையல் எரிவாயு விலைகளை ஏற்றும் உத்தேசம் இல்லை, அமைச்சரவை இது குறித்து பின்பு முடிவெடுக்கும்" என்றார் ஜெய்பால் ரெட்டி.

ஆனாலும் உலகச் சந்தையில் கச்சா விலை ஏறிவருவதால் நாட்டின் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்றார் ஜெய்பால் ரெட்டி.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கு மட்டும் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.32,000 கோடி இழப்பீடு கேட்டுள்ளது.

ஜூன் 2010-இல் நிறுவனங்கள் விலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று உத்தரவு பிற்ப்பிக்கபப்ட்டதால் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீடு கொடுப்பதில்லை.

சூழ்நிலை மோசமாக உள்ளது ஆனாலும் அரசு பெட்ரோல் விலையை ஏற்றும் முடிவுக்கு ஆதரவாக இல்லை என்றார் ஜெய்பால் ரெட்டி.

வெப்துனியாவைப் படிக்கவும்