உலகில் ரொம்பக் கம்மி விலையில் ’ டேட்டா ’ எங்கு தெரியுமா?
புதன், 6 மார்ச் 2019 (15:54 IST)
நவீனமான உலகில் எல்லோர் கையிலும் செல்போன் உள்ளது. முன்னாட்களில் வெளியில் மைதானத்தில் விளையாடிய குழந்தைகள் செல்போனில் பப்ஜி கேம் மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கி வருகின்றனர் . இதற்கு தொலை தொடர்பு நிறுவனங்கள தரும் டேட்டா ஆஃபர்களும் முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் 230 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உலகில் மிகவும் குறைந்த விலையில் டேட்டா வழங்கப்படுவது இந்திய நாட்டில் தான் என்று தகவல் வெளியாகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் தொலை தொடர்புத் துறையில் ஜியோ நிறுவனம் கால் வைத்த போது, இங்குள்ள மற்ற போட்டி நிறுவனங்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது.
காரணம் இலவச 4 ஜி டேட்டா என்ற பலமான அறிவிப்பை முகேஷ் அம்பானி அறிவித்ததுதான்.
எனவே தம் இருப்பை தக்க வைக்க மற்ற போட்டி நிறுவங்களும் டேட்டாவை குறைந்த விலைக்கு தந்தன. தற்போதும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் மட்டும் தான் 1 ஜிபி டேட்டா ரூ.18.30 க்கு வழங்கப்படுகிறது.ஆனால் பிரிட்டனில் 1 ஜிபி டேட்டா என்பது ரூ.469.77 ஆக உள்ளதாகவும், அதே சமயம் அமெரிக்காவில் ஒரு ஜிபி டேட்டா ரூ.871.51 ஆக இருப்பதாகவும் தெரிகிறது.
உலகில் மக்கள் தொகை பரப்பளவு அதிகளவு உள்ள இந்தியாவில் தொலைத் தொடர்பு சந்தையைப் பிடிப்பதற்க்காக கொண்டு வரப்பட்டது. அது தற்பொழுது மக்களிடம் நங்கூரமாக பதிந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
இந்தியாவைப் போன்றே சில நாடுகளில் இதே போன்றே குறைவான விலையில் டேட்டா சேவை வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகிறது.