இலவச பிராட்பேண்ட் சேவை : ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். அதிரடி

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (14:32 IST)
நாட்டின் பொதுத்துறையைச் சேர்ந்த தகவல் தொடர்பு நிறுவனமான பிஎஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் இலவச சேவையை வழங்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துவோருக்கு டேட்டா பலன்களுடன் கூடிய பிராண்ட் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.  இதனால் வாடிக்கையாளர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தப் புதிய சலுகையானது  பி.எஸ்.என்.எல் சேவை அளிக்கப்படும் எல்லா இடங்களிலும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த ஆஃபரை செயல்படுத்த வாடிக்கையாளர்கள் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிற்க்குத் தொடர்பு கொண்டு அழைப்பு விடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பகிரங்கமாக இந்த இலவச சேவை துவக்கப்படாத ரிலையன்ஸ் ஜியோவிற்கு பிஎஸ்.என்.எல் இந்த அறிவிப்பு கடும் போட்டியை ஏற்படுத்தும் என தெரிகிறது.
 
பி.எஸ்.என்.எல்.வாடிக்கையாளர்கள்,  18003451504  என்ற இலவ தொலைபேசி எண்ணிற்கு  தொடர்பு கொண்டு பிராட்பேண்ட் சேவைக்கு  முன்பதிவுச் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் ஏற்கனவே பிஎஸ்,என்.எல் பிராட்பேண்ட் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இதற்கென்று தனி கட்டணம் செலுத்த வேண்டும். அதனடிப்படையில் இந்தக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இப்புதிய சலுகையில் இந்தக் கட்டணம் முழுமையாக ரத்துசெய்யப்படும் . இதில் பிராட்பேண்ட் சேவை மட்டுமின்றி இன்னும் சில இலவசங்களை வாரிக் கொடுக்கிறது.
 
இவ்விணைப்பில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் மாதாமாதம் 5 ஜிபி டேட்டாவை வழங்கும். 5 ஜிபி டேட்டா முடிந்ததும் வாடிக்கையாளர்கள் மேற்கொண்டு கட்டணம் செலுத்தி கூடுதல் டேட்டாக்களை பெற்றுக்கொள்ளலாம். 
 
பிஎஸ்.என்.எல்லில் ஆண்டு சலுகைகளை வாங்கும் போது 25 % கேஷ்பேக் வழங்குகிறது. இச்சலுகையானது கடந்த  டிசம்பர் 31 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் மார்ச் 31 , 2019 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் பி.எஸ்.என்.எல்வாடிக்கையாளர்கள் குஷி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்