3டி ஐ-போன் தயாரிப்பில் HP

சனி, 23 மார்ச் 2013 (12:24 IST)
FILE
அமெரிக்க தொழில்நுட்ப கம்பெனியான ஹவ்லெட் பேக்கர்ட்’ புதிய ’3டி’ போன்களை தயாரித்து வெளியிட உள்ளது. நேராக செல்லும் ஒலிக்கற்றையில் ஏற்படுத்தப்படும் குறுக்கீடுகள் அதனைத் திசை திருப்புவதால் உண்டாகும் முப்பரிமான தோற்றங்கள் சாதாரணமாகப் பார்க்கும்போதே தோன்றும் வகையில் இந்த போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிறிய திரையில் கூட தெளிவாகத்தெரியும் வண்ணமும், அசையும் மற்றும் அசையாப் பொருட்களைக் கூட வண்ணங்களில் காணும் விதமாகவும் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.
மருத்துவப் பயிற்சி, பொழுதுபோக்கு அம்சங்களில் இவற்றின் பயன்பாடு முக்கியத்துவம் பெறும் என்று இதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன்னாள் இத்துறையில் முயற்சி செய்யப்பட விஷயங்கள் பெரும் பொருட்செலவினை ஏற்படுத்தியதோடு செயல்முறையும் மந்தமாகவே இருந்ததது என்பது குறிப்பிடத்தக்கது.

அவதார், ஆலிஸ் இன் வொண்டர்லண்ட் போன்ற 3டி திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இப்படத்திற்குப் பிறகு முப்பரிமான விஷயங்கள் குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. ஆனால் இவை யாவும் அதற்கெனத் தயாரிக்கப்பட்ட விசேஷக் கண்ணாடிகள் மூலமே பார்க்க முடிந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்