இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் பக்ரீத் பண்டிகை!!

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் துல்ஹஜ் 10-ம் நாள், ‘ஹஜ் பெருநாள்  எனப்படும் பக்ரீத்’ போற்றிக் கொண்டாடப்படுகிறது. 
இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் செய்வது. இதன் இறுதியில் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம்  போன்றவற்றை இறைவனுக்கு பலியிட வேண்டும். இவ்வாறு செய்து கொண்டாடுவதை ’பக்ரீத்’ என்கின்றனர். இதனை தமிழில் ‘தியாகத்  திருநாள்’ என்றும், அரபியில் ‘ஈத் அல்-அதா’ என்றும் அழைக்கின்றனர்.
 
இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய  ஈராக்கில் வாழ்ந்து  வந்ததார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது  மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு  பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய  அராபியர்கள். 
 
இஸ்மாயீல் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம்  கட்டளையிட்டான். இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின்  அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும்  வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான்.
 
இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில்,  இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்