டெர்மினேட்டர் 6 - அர்னால்டுடன் மீண்டும் இணையும் ஜேம்ஸ் கேமரூன்

செவ்வாய், 23 மே 2017 (14:17 IST)
டெர்மினேட்டர் படத்தின் 6ம் பாகத்திற்காக ஹாலிவுட் நடிகர் அர்னால்டுடன், அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
டெர்மினேட்டர் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கிவர் ஜேம்ஸ் கேமரூன். இதில் முதல் பாகத்தில் வில்லனாகவும், இரண்டாம் பாகத்தில் ஹீரோவாகவும் நடித்திருப்பார் அர்னால்டு. 
 
அதன் பின் டெர்மினேட்டரின் அடுத்தடுத்த பாகங்களை, வேறு சில இயக்குனர்கள் இயக்கினர். தற்போது, ஜேம்ஸ்கேம்ரூன், அவதார் படத்தின் அடுத்த பாகங்களை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். 


 

 
இந்நிலையில், டிம் மில்லெர் என்ற இயக்குனர் இயக்க, அர்னால்டு நடிக்கும் டெர்மினேட்டர் 6 படத்தை ஜேம்ஸ் கேமரூன் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதை இப்படத்தின் ஹீரோ அர்னால்டும், இயக்குனரும் உறுதி செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்