சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமிக்கு பூஜைக்கு உகந்த நேரம் எது...?

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (15:40 IST)
மகிஷாசுரனை கொன்று மண்ணுலக, விண்ணுலகத்தினருக்கு விடுதலை வாங்கி தந்த அன்னையின் வெற்றியை கொண்டாடும் விதமாக விஜயதசமி என்ற அற்புத நாள் கொண்டாடப்படுகிறது. இது புரட்டாசி மாதம் 5ம் தேதி தசமி திதியில் விஜயதசமி கடைப்பிடிக்கப்படுகிறது.


குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது அல்லது வீட்டிலேயே வித்யாரம்பம் செய்வது, நடனம், சங்கீதம், வீணா, வேணு, வயலின் போன்ற இசைக் கருவிகளை கற்க ஆரம்பித்தல் நலம். முன்பே கற்க ஆரம்பித்தவர்களும் முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தங்கள், வாத்தியக் கருவிகள், மற்றும் தமது தொழிலுக்கான கருவிகளை விஜய தசமி பூஜை முடிந்து உபயோகம் செய்தல் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. இந்த நல்ல நாளில் தமது குருவுக்கு வந்தனங்கள் செய்து குரு-தக்ஷிணை அளித்து வணங்குதல் நல்லது.

விரத காலங்களில் பாட வேண்டிய அம்மன் பாடல்கள்:

1. தேவி மகாத்மியம்
2. அபிராமி அந்தாதி பாடல் வரிகள்
3. துர்கா அஷ்டகம்
4. இலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)
5. சகலகலாவல்லி மாலை
6. சரஸ்வதி அந்தாதி
7. மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம்
8. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

பூஜை செய்ய உகந்த நேரம்:

காலை 07.30  முதல் 09.00 வரை
காலை 09.00  முதல் 10.30 வரை
பிற்பகல் 10.30 முதல் 12.00 வரை
மாலை 04.30 முதல் 06.00 வரை.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்