இன்று சனி பிரதோஷம்: சிவன் கோவில்களில் குவியும் பக்தர்கள்!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (14:11 IST)
இன்று சனி பிரதோஷம்: சிவன் கோவில்களில் குவியும் பக்தர்கள்!
இன்று சனிக்கிழமை பிரதோஷம் என்பதால் சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஒவ்வொரு முறையும் பிரதோஷ காலத்தில் பக்தர்கள் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பெருமானுக்கு வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது
 
பிரதோஷ தரிசனம் செய்தால் வறுமை, நோய், கடன் ஆகியவை விலகும் என்பது ஐதீகம். இன்று சனி பிரதோஷம் என்பதால் முக்கியத்துவமான நாளாக கருதப்படுகிறது
 
இதனையடுத்து சிவ ஆலயத்தில் உள்ள நந்திக்கு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். சனிப் பிரதோச நாட்களில் சிவனை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது
 
சனிக்கிழமை பிரதோஷ தினத்தில் சிவனை ஆலயத்தில் சென்று வழிபட்டால் 5 வருடங்கள் வழிபட்டதிற்கு சமம் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்