* துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
* மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார்.
* பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளை, எண்ணை தேய்த்து கொண்டு துளசி பறிக்க கூடாது.
* அதிகாலைப்பொழுதும், சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டு துளசி பறிக்க வேண்டும்.
* துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம்.
* விரதநாள், மூதாதையரின் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் வேளை, தானம் செய்யும் போது ஆகிய இடங்களில் துளசி பயன்படுத்துவதால் அந்த செயல் பரிபூரண பலன் கொடுக்கும்.
சங்காபிஷேகத்தில் துளசி
சங்கு, துளசி, சாளக்கிராமம் (புண்ணிய நதிகளில் கிடைக்கும் கல் வடிவ சிலை) மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மஹாஞானியாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. சிவபெருமானுக்கு பிடித்த அபிஷேகங்களில் உயர்ந்தது சங்காபிஷேகம்.