திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (18:23 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 18ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பிரமோற்சவம் நடைபெற இருப்பதை அடுத்து இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதற்காக ஆறு மணி நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது. 
 
 ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது வழக்கமான நிலையில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளுக்காக ஆறு மணி நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது. 
 
அதன் பிறகு ஆழ்வார் திருமஞ்சனம்  நிகழ்ச்சிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  திருப்பதி பிரமோற்சவம் வரும் 18ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதை அடுத்து அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்..
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்