இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (23-01-2022)!

ஞாயிறு, 23 ஜனவரி 2022 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்
இன்று பெண்மணிகளுக்கு அமைதியான நாளாக அமைகிறது. தெய்வ வழிபாட்டில் சிரத்தையுடன் ஈடுபடுவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். சகோதர, சகோதரிகள் தேவைக்கேற்ப உதவிகளைச் செய்வார்கள். ஆனால் வருமானம் சுமாராகவே இருக்கும். தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 

ரிஷபம்
இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். பேச்சாற்றல் அதிகரிக்கும். துறையில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 

மிதுனம்
இன்று ஓரளவு வருமானத்தைக் காண்பீர்கள். பலரின் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். மற்றபடி பணியாட்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5     

கடகம்
இன்று உடன்பணிபுரிவோர் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். மற்றபடி போட்டிகளை சாதுர்யமாக சமாளிக்கவும். மேலும் படிப்படியாகத்தான் வளர்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

சிம்மம்
இன்று அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். அதேநேரம் தான் உண்டு தன் வேலையுண்டு என்கிற ரீதியில் பணியாற்றி அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் ஒதுங்கி இருங்கள். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கன்னி
இன்று வழக்கு விவகாரங்களில் இழுபறி ஏற்படும். எந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டாலும் எல்லா ஷரத்துக்களையும் நன்றாகப் படித்து புரிந்துகொண்டு கையெழுத்திடவும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

துலாம்
இன்று நண்பர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். அவர்களின் விஷயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். மற்றபடி சாதுர்யமாகப் பேசுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளைத் தொடங்குவீர்கள். இல்லத்திலும் முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த முயல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிறையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

விருச்சிகம்
இன்று நண்பர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் சரியான நேரத்தில் தேவையான உதவிகளைச் செய்து பெருமையடைவீர்கள். அதேநேரம் எவரையும் கடிந்து பேச வேண்டாம். பிறரிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது நல்லது. வரவுகள் சீராக இருந்தாலும் செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

தனுசு
இன்று பெற்றோரால் நலம் உண்டாகும். சமுதாயத்தில் பெரியவர்களை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். அவர்களின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் முழுமையாகச் செயல்படுத்துவீர்கள். பொருளாதாரத்தில் தொய்வில்லாமல் சீரான வருமானம் வந்து கொண்டிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 

மகரம்
இன்று  தைரியத்துடன் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். கஷ்டங்களை திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நுட்பமான விஷயங்களிலும் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்து சேர்ந்து உங்களை திக்குமுக்காட வைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 

கும்பம்
இன்று இதுவரை இல்லத்திற்கு வராத உறவினர்கள் இன்று வருவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவீர்கள். ஆனாலும் அனைத்து விஷயங்களும் முடியும் வரை ஒரு பயம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 

மீனம்
இன்று எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கமாட்டீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்