குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவின் சிறப்புக்கள் !!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (12:49 IST)
பல்வேறு ஊர்களிலும் உள்ள முத்தாரம்மன் கோயில்களில் வருடந்தோறும், ஆடி அல்லது ஆவணி மாதங்களில் கொடை விழா நடத்தப்படுவது வழக்கம். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலிலும் கொடை விழா நடக்கும். ஆனால், புரட்டாசி மாதம் நடைபெறும் இந்த தசரா பண்டிகையின்போது, எல்லா ஊர்க்காரர்களின் ஈர்ப்பு புள்ளியாக மாறுவது குலசேகரன்பட்டினம்தான்.


தசரா விழா நடைபெறும் 10 நாட்களும், அவரவர் ஊர்களில் உள்ள முத்தாரம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், பொங்கல், சுண்டல் உள்ளிட்ட படையல்கள் இட்டு சிறப்பு பூஜை செய்யும் மக்கள், 10வது நாள் விஜயதசமியன்று, அலைகடலென குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்குதான் செல்வர். அன்றைய தினம் மட்டும் குலசேகரன்பட்டினத்தில் பக்தர்கள் அலை கடலென குவிந்து, அம்மனை வழிபடுவார்கள் என்பது சிறப்பு.

மகிஷாசூர சம்ஹாரம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் விஜயதசமி நாளன்று, மகிஷாசூர சம்ஹாரம் மிகவும் பிரபலமானது. வேடமணிந்த பக்தர்கள் கோயிலை நெருங்கும்போது அம்மன் அருள் வந்து ஆடுவதை காண கண்கோடி வேண்டும். அதிலும் காளி வேடமணிந்த பக்தர்களின் ஆவேச ஆட்டத்தை கட்டுப்படுத்த தசரா செட்களில் உள்ள பிறர் பெரிதும் முயற்சி எடுத்துக் கொள்வார்கள்.

விஜயதசமி நாளின் நள்ளிரவில், வங்கக்கடலோரம், நடைபெறும் மகிஷாசூரசம்ஹார விழாவில், அம்பிகை மகிஷனை வதம் செய்ததும் தசரா விழா இனிதே நிறைவு பெறும். காப்புகட்டி வேடமணிந்த பக்தர்கள், அம்பிகையை தரிசனம் செய்த நிறைவோடு, அதன்பிறகு காப்பை கழற்றி விரதத்தை நிறைவு செய்வார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்