நாம் சொல்லும் காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன தெரியுமா...?

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (13:50 IST)
சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி என, அறிவையே பெண் தெய்வ உருவில் வழிபடுமாறு, நம் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. உலகின் மிகச் சிறந்த மந்திரமாகப் போற்றப்படுவது காயத்ரி மந்திரம்.


என் அறிவானது, மனதையடக்கி, நல்வழிப்படுத்த இயலாமல் மங்கும்போதெல்லாம், ஞானமே வடிவாகிய அந்த சக்தியானவள், அறிவுக்கு ஆற்றலைத் தந்தருள வேண்டும் என்பது, அந்த மந்திரத்தின் பொருளாகும். இது தான் பாரதத்தின் ஒட்டுமொத்த அறிவாற்றலுக்கும் காரணம் என்பதைக் கண்ட மற்ற நாடுகளும், மதங்களும் இன்று காயத்ரி மந்திரத்தைக் கற்று ஓதத் துவங்கியுள்ளன.

வேதங்கள், சாஸ்த்திரங்கள் மற்றும் உலக உயிர்களின் அறிவாக இருக்கும் சக்தியை, ஸ்ரீ மஹா சரஸ்வதி தேவியாக வழிபடும் நாளாக, இன்றைய ஒன்பதாவது நாள் நவராத்திரியைக் கொண்டாடி அருள் பெறுவோம்.

பொய், சூது, வாது ஆகிய தீயக்குணங்கள் கொண்டவர்களை, அம்பிகை விரும்ப மாட்டாள். உண்மை, பக்தி, அன்பு கொண்டவர்கள் எவ்வளவு வறியவர்களாக, இயலாதவர்களாக இருந்தாலும், அவர்களைத் தேடிச் சென்று, அறிவாற்றல் எனும் பெரும் ஐஸ்வர்யமாகிய சக்தியை அருளுவாள்.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்