தேன் ஒரு சோட்டு எடுத்து, அத்துடன் இலவங்கப்பட்டை பொடி ஒரு சிட்டிகை சேர்த்து படுக்கைக்கு செல்லும் முன் இரவில் உங்கள் முகத்தில் உள்ல புள்ளிகளின் மூது தடவவும். மறுநாள் காலை, சுத்தமான நீரினால் முகத்தை கழுவவும். இது தோலில் சிகிச்சையை மெதுவாக செய்யும். ஆனால் திறப்பட நிறமூட்டலோடு கரும்புள்ளிகளையும் குறைக்க உதவுகிறது.
முகப்பருவை குறைக்க வேண்டுமென்பவர்கள், இதனை தினமும் தடவி வந்தால், பருக்களை குறைக்க முடியும். ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா அழிவதோடு, பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.
வறட்சியான சருமம் இருந்தால், அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால், அவை சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, சருமத்தை மென்மையாக்கும். குறிப்பாக பெண்கள் அளவான மேக்-கப் போட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற வைத்து, கழுவி பின் மேக்-கப் போட்டால், நன்றாக இருக்கும்.