மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 40-50 வயது பெண்கள் 412 பேரின் மருத்துவ விவரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முக்கியமாக, இரவில் அவர்கள் எவ்வளவு நேரம் தூங்குகின்றனர் என்ற தகவலும் பெறப்பட்டது.
பொதுவாகவே, எல்லாருக்கும் தினமும் 6 மணி நேர தூக்கம் அவசியம். பெண்களும் கட்டாயம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். வேலை பளு, மன உளைச்சல் போன்ற காரணங்களால் பல பெண்கள் போதிய அளவு தூங்குவதில்லை. இரவு தூக்கம் 6 மணி நேரத்தைவிட குறைந்தால், எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படும்.
ஏற்கனவே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்கள், நோய் பாதிப்பில் இருந்து ஓரளவு விடுபட்டவர்கள் ஆகியோருக்கும் போதுமான தூக்கம் அவசியம். அவர்கள் தினமும் 6 மணி நேரம் தூங்காவிட்டால், மார்பக புற்றுநோய் மீண்டும் தீவிரமாகும் அபாயம் இருக்கிறது. இவ்வாறு செரில் தாம்சன் கூறியுள்ளார்.