திசுக்களை புதுப்பிக்க உதவும் புதினா

செவ்வாய், 28 ஜூன் 2022 (23:50 IST)
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலிய பிரச்சனைகளை போக்க புதினா பயன்படுவதோடு உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

புதினாவில் அதிக நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் என பலவேறு சத்துக்களும் உள்ளது.
 
பொதுவாக நம் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கக்கூடிய இயற்கை தாவரம். நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்யவும் உணவு செரிமானம் சம்பந்தமாக வரும் சூட்டையும் சுரத்தையும் நீக்கவல்லது. புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
 
புதினா கீரையை நீர் விடாமல் அரைத்து பற்றுப் போட்டால் தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலி குறையும். பல நேரங்களில் ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.
 
உலர்த்தப்பட்ட புதினாக் கீரையைப் பொடி செய்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக, மேற்கண்ட நோய்கள் குணமாகும்வரை, இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும். அவ்வாறு மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.
 
பற்சிதைவும் தடுக்கப்படும். பற்கள் விழுவதும் தாமதப்படும். மேலும் கீரையை மெல்லுவதால் நாக்கில் உள்ள சுவை நரம்புகள் மீண்டும் சக்தி பெறுகின்றன.
 
புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.
 
சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாவை குடிநீராக தயார் செய்து குடித்து வந்தால் எரிச்சல் தணியும். உடல் சூடு தணியும்.
 
* வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும்.
* உடல் தொப்பை, பருமன் குறைகிறது.
 
* அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். காலரா அண்டாது.
 
* சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறுகின்றனர்.
 
* தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறு
கின்றது.

 
* மலக்கட்டு விலகி ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மருந்துச்சாறு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்