உடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை

Webdunia
ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (21:00 IST)
இயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

 
செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்து உடல் எடையை அதிகரிக்கிறது. கறிவேப்பிலை செரிமான பிரச்சினையைப் போக்க உதவும். கறிவேப்பிலையை பச்சையாகவும் ஜூஸ் செய்தும் உட்கொள்ளலாம்.
 
காலை நேரத்தில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சிறிது எடுத்துக்கொண்டால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை குறைய வழிவகுக்கும். பச்சை கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்க அதிகளவில் உதவும்.
 
ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து தண்ணீரோடு ஜூஸ் செய்து தேன் சேர்த்து குடிக்கலாம். கறிவேப்பிலை உடலை சுத்தம் செய்து, உடலில் உள்ள நச்சுமிக்க பொருட்களை வெளியேற்றும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்