கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகும் சுண்டைக்காய்

சனி, 11 டிசம்பர் 2021 (00:10 IST)
சுண்டைக்காய் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன. சுண்டையில் புரதம், கல்சியம், இரும்புச்சத்து  ஆகியவை மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.
 
வாரம் இருமுறை சாப்பிடுவதன்  மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல், அஜீரணம் முதலானவற்றையும் போக்கக் கூடியது.
 
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் உடற்சோர்வு நீங்கும்.
 
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள  வேண்டும்.
 
வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறிவிடும். அல்சர் மற்றும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
 
முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.  குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்
 
தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.
 
சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடலில் உள்ள புழுக்கள் இறந்து விடும், சர்க்கரைநோய் போன்றவைக் கட்டுப்படும். மேலும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.
 
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கிடைக்க கூடிய ஒரு அற்புத மூலிகைகளில் இதுவும் ஒன்று. இதற்கு  தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய்,  வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்