டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனை சென்னையில் கிளாகோமா! - நோயாளிகளுக்கான மாநாட்டை நடத்துகிறது!

செவ்வாய், 26 மார்ச் 2024 (17:09 IST)
●      நோயாளிகளின் நேரடி ஒளிபரப்பு மற்றும் தொலைதூரத்தில் உள்ளவர்களும் பங்கேற்பதற்கு வசதியாக நாடு முழுவதும் உள்ள அதன் மையங்களில் வீடியோ கான்பரன்சிங் வசதிகளை இந்த மருத்துவமனை நிறுவுகிறது

●      நோயாளிகள் https://www.dragarwal.com/glaucoma-patient-summit/ என்ற இணையதளம் மூலம் நிகழ்வில் பங்கேற்க பதிவு செய்யலாம் அல்லது 95949 01868 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

●      நேரில் பங்கேற்கும் அனைவருக்கும், கிளாகோமா பரிசோதனை இலவசமாக நடத்தப்படும்

சென்னை, மார்ச் 26, 2024: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சென்னையில் 29 மார்ச் 2024 அன்று, கிளாகோமா நோயாளிகள் மாநாட்டை ஏற்பாடு செய்கிறது. இந்தியாவின் முன்னணி கண் மருத்துவர்கள் மற்றும் கிளாகோமா நிபுணர்கள் உரையாற்ற உள்ள இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புவதற்காகவும், தொலைதூரத்தில் இருந்து நோயாளிகள் பங்கேற்பதை எளிதாக்குவதற்காகவும் இந்த மருத்துவமனை நாடு முழுவதும் உள்ள அதன் மையங்களில் வீடியோ கான்பரன்சிங் வசதிகளை நிறுவுகிறது. இதில் பங்கேற்பதற்காக பதிவு செய்ய, நோயாளிகள் https://www.dragarwal.com/glaucoma-patient-summit/ என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 95949 01868 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

 

கிளாகோமா என்பது கண் நோய்களின் ஒரு பிரிவு ஆகும். இது பார்வை நரம்பு எனப்படும் கண்களின் பின்புறத்தில் உள்ள நரம்பை சேதம் அடைவதன் மூலம் பார்வை இழப்பை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகள் மிகவும் மெதுவாகத் தொடங்கும், இதனால் நோயாளிகள் அவற்றைக் கவனிக்க மாட்டார்கள். ஒரு நபருக்கு கிளாகோமா இருக்கிறதா என்பதைக் கண்டறிய விரிவான கண் பரிசோதனை செய்து கொள்வது தான் ஒரே வழியாகும்.

தனிப்பட்ட முறையில் இதில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், அடிப்படையான கிளாகோமா கண் பரிசோதனை இலவசமாக நடத்தப்படும். இந்த சோதனைகளில் NCT மற்றும் ஃபண்டஸ் பிக்சர் ஸ்கிரீனிங் ஆகியவை அடங்கும். இந்த மாநாட்டில் பங்கேற்பாளர்கள் கேள்விகளைக் கேட்கவும், நிபுணர்களின் கருத்துக்களைப் பெறவும் உரையாடும் அமர்வுகளும் இடம்பெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.99 ஆகும். இதற்கான பதிவின் போது தங்கள் மருந்துச் சீட்டைப் பதிவேற்றும் பங்கேற்பாளர்கள் வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு பதிவுக் கட்டணத்தில் தள்ளுபடி பெறுவார்கள். பதிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்திற்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்படும்.

ஊடகத்தினருடன் உரையாடிய மருத்துவ சேவைகளின் தலைவர், டாக்டர் அஷ்வின் அகர்வால் கூறுகையில், மீளமுடியாத பார்வை இழப்புக்கு மிகவும் பொதுவான காரணம் கிளாகோமா ஆகும். உலக அளவில் 80 மில்லியன் மக்கள் இந்த நிலையில் உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள்தொகையில் கிளாகோமாவின் வயது-தரப்படுத்தப்பட்ட பாதிப்பு தோராயமாக 3-5% ஆகும். இந்தியாவில், இது கண்புரை மற்றும் ஒளிவிலகல் பிரச்சினைக்குப் பிறகு பார்வை இழப்புக்கு மூன்றாவது முக்கிய காரணமாகும். தற்போது, நாட்டில் 12 மில்லியன் கிளாகோமா நோயாளிகள் உள்ளனர். ஆனால் குறிப்பாக நீங்கள் இந்த நோயை அதன் ஆரம்ப கட்டத்தில் கண்டு பிடித்தால் சிகிச்சை மற்றும் வழக்கமான சோதனைகள் மூலம் பார்வை இழப்பை குறைக்க அல்லது தடுக்க முடியும். ஊடுவழி மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியவை பார்வை பறிபோகும் நிலையை நிர்வகிப்பதற்கான உத்திகள் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் முக்கியமானது.

மாநாட்டின் இலக்குகள் குறித்து அவர் பேசுகையில், “எந்தவொரு நோயாளியும் கிளாகோமாவை எதிர்த்து தனியாகப் போராடக்கூடாது என்பதற்காக நாங்கள் கிளாகோமா நோயாளிகளுக்கான மாநாட்டை நடத்துகிறோம். இந்த நிகழ்வானது, கிளாகோமாவுடன் வாழும் நபர்களை அறிவு, இணைப்பு மற்றும் பகிரப்பட்ட அனுபவங்கள் மூலம் ஒருவரையொருவர் மேம்படுத்தும். இதில் இடம்பெறும் குழு விவாதங்கள் மூலம், அவர்கள் கிளாகோமா, மேம்பட்ட கிளாகோமா கண் சிகிச்சை விருப்பங்கள், அதன் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை மேலாண்மை பற்றி அனைத்தையும் அறிந்துகொள்ளலாம். மேலும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் சக நண்பர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களின் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான வழிகளைக் கண்டறியலாம்.”

இந்த மாநாட்டின் குழுவில் டாக்டர் அஷ்வின் அகர்வால், தலைமை மருத்துவ அதிகாரி - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை; டாக்டர் கலாதேவி சதீஷ், மண்டலத் தலைவர் - மருத்துவ சேவைகள், சென்னை; டாக்டர் பிரீத்தி எஸ், பிராந்தியத் தலைவர் - கிளினிக்கல் சர்வீசஸ், கச்சிபௌலி, டாக்டர் அனு எம். ராஜாடின், கண் மருத்துவ மூத்த ஆலோசகர், டாக்டர் மணீஷ் ஷா மற்றும் டாக்டர் மேதா பிரபுதேசாய், மருத்துவ சேவைகளின் தலைவர்கள் மற்றும் டாக்டர் சுகேப்ரியா, க்ளௌகோமா சிறப்பு நிபுணர், கண் மருத்துவ ஆலோசகர் மற்றும் டாக்டர் சினேகா மதுர் கன்காரியா, கண் மருத்துவ ஆலோசகர். இவர்கள், கிளாகோமாவைப் புரிந்துகொள்ளுதல்; கிளாகோமா பற்றி அறிதல் மற்றும் பரிசோதனை; மருத்துவ மேலாண்மை; கிளாகோமாவில் லேசர்கள்; அறுவை சிகிச்சை மேலாண்மை; மாற்று சிகிச்சைகள்; பார்வை மீட்பு, மற்றும் உணர்வு கூறு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் குழு விவாதங்களில் உரையாற்றுவார்கள்.

இந்த மாநாட்டின் நேரடி ஒளிபரப்பு தெலுங்கானா (செகந்திராபாத்), பெங்களூர் (யெலஹங்கா), புனே (கோத்ரூட்), மும்பை (செம்பூர்), கோயம்புத்தூர் (ஆர்எஸ் புரம்), மதுரை (ஆரப்பாளையம்), மொஹாலி, சேலம், புதுச்சேரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்