தற்போதைய டெக்னாலஜி உலகில் சைக்கிள் ஓட்டும் நபர்களையே சாலைகளில் மிகவும் அரிதாக தான் பார்க்க முடிகிறது. ஆனால் தினமும் சைக்கிள் ஓட்டினால் ஏராளமான பலன்கள் இருக்கும் என்று உடற்பயிற்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சைக்கிள் பயன்பாடு என்பது உடல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் நடை பயிற்சி எவ்வளவு அவசியமோ அதேபோல் சைக்கிள் ஓட்டுவதும் அவசியம் என்றும் கூறப்படுகிறது
சைக்கிள் ஓட்டுவது மிகவும் எளிமையான பயிற்சி என்பதால் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை செய்யலாம். சைக்கிள் ஓட்டுவதால் தசை பிடிப்பு, கைகால் மூட்டுதல் ,ரத்த ஓட்டம், இதயத்துடிப்பு இப்படி உடலின் அனைத்து பாகங்களும் சீராக செயல்படும் என்பதும் உடலில் உள்ள மூளை உள்பட பாகங்கள் அனைத்தும் திறமையாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.