காட்டன் டயப்பர்கள் குழந்தைகளுக்கு அணிவித்தால் குழந்தைகளின் தோலுக்கு எந்த வித கெடுதலும் இருக்காது, மேலும் அதை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம், ஆனால் கெமிக்கல் கலந்த மாடர்ன் டயப்பர் அணிவிப்பது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் முடிவுகள் தெரிவித்துள்ளன
மாடர்ன் டயப்பர்களில் ஒரு சில விஷப்பொருட்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அது குழந்தைகளின் உடல்நலனை பெரிதும் பாதிக்கும் என்றும் குறிப்பாக சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது