நடிகர் மாதவன் நடித்து, விரைவில் வெளியாக உள்ள இறுதிச்சுற்று திரைப்படத்தில், அவரும் நாசரும் டாஸ்மாக்கில் அமர்ந்து, மது அருந்திக் கொண்டே பேசுவது போல் ஒரு காட்சியை இயக்குனர் படம் பிடித்துள்ளார்.
ஆனால், போதையில் இருப்பது போல் மாதவனால் நடிக்க முடியவில்லை. எனவே காட்சி இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் குடித்துள்ளார். படிப்படியாக அதிகமாகவே குடித்துவிட்டார் மாதவன். அதனால் போதை தலைக்கேறி, அவர் நடந்து கொண்ட விதத்தை படக்குழுவினர் வீடியோவாக எடுத்து தற்போது வெளியிட்டுள்ளனர்.