ரிலையன்ஸ் ஜியோ - ஏர்டெல் 4ஜி நெட்வொர்க்... எது சிறந்தது??

வியாழன், 22 செப்டம்பர் 2016 (10:51 IST)
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்-வோடாபோன் கட்டண திட்டங்களின் விவரத்தை ஒப்பிட்டு பார்ப்போம்.


 
ஜியோ, ஏர்டெல், வோடாபோன்:
 
ரூ.50-ல் தொடங்கும் ஜியோ கட்டணங்கள் 10ஜிபி வரையிலான ஒரு மாத கால 4ஜி தரவை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனமோ ரூ.249க்கு 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவை வழங்குகிறது. வோடாபோன் ரூ.252க்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்குகிறது.
 
ஏர்டெல் 1 வருட திட்டங்கள்: 
 
சமீபத்தில், ஏர்டெல் ஓராண்டு தரவு ரீசார்ஜ் சம்பந்தமான புதிய திட்டங்களை வழங்கவுள்ளதாக அறிவித்தது. அதன் மூலம் ஏர்டெல் ப்ரீபெய்டு பயனர்கள் ரூ.1,498 ரீசார்ஜ் செய்ய 1ஜிபி அளவிலான 4ஜி தரவை அனுபவிக்க முடியும். அதாவது மாத்திற்க்கு ரூ.51 என்ற விலை.
 
ரிலையன்ஸ் ஜியோவின் 60 ஜிபி: 
 
ரிலையன்ஸ் ஜியோ சேவையானது ரூ.400ல் 60 ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்குகிறது. இந்த சலுகை 30 நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏர்டெல் 20 ஜிபி: 
 
ரிலையன்ஸ் ஜியோவின் முக்கிய போட்டியாளராக திகழும் ஏர்டெல் மாதத்திற்கு 20 ஜிபி அளவிலான தரவை அதிகபட்சமாக ரூ 1,989 கட்டணத்தில் வழங்குகிறது. 
 
ஏர்டெல் மற்றும் வோடாபோன்: 
 
ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகளில் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்களை பெற இயலாது. ரிலையன்ஸ் ஜியோவில் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் உட்பட முழு மாதம் இலவச தொகுப்பு கிடைக்கும், ஆனால் ஏர்டெல் மற்றும் வோடாபோனில் தனித்தனியாக குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் கட்டணம் செலுத்த வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்