இனி வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை

செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (21:41 IST)
உலகம் முழுவதும் அதிக அளவிலான ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பயன்படுத்தும் செயலி வாட்ஸ்அப். வாட்ஸ்அப் நிறுவனம் மின்னணு பணப்பரிமாற்ற சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.


 

 
அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படும் சமூக ஊடகமான வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக மின்னணு பணப்பரிமாற்ற சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த சேவையை முதலில் இந்தியாவில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளது. 
 
இந்தியாவில் உயர் மதிப்பு ரூபாயான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட பின் மின்னணு பரிவர்த்தனை அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் இத்திட்டத்தை இந்தியாவில் முதலில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
 
மேலும் 100 கோடி வாடிக்கையாளர்களில், 20 கோடி பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்