ரிலையன்ஸ் ஜியோ கோரிக்கையை ஏற்க டெலிகாம் நிறுவனங்கள் அதிரடி மறுப்பு

வியாழன், 8 செப்டம்பர் 2016 (13:23 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இண்டர்கனெக்ஷன் பாயின்ட் கோரிக்கையை ஏற்க முடியாதென்று டெலிகாம் நிறுவனங்கள் கடுமையாக மறுத்துள்ளது.


 
 
செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ துவக்கமே அதிரடியாக இருந்த நிலையில், 10 கோடி வாடிக்கையாளர்களின் இணைப்பு டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
ஜியோ வாடிக்கையாளர்களின் வாய்ஸ் கால் மூலம் இந்தியா டெலிகாம் நிறுவனங்களின் சராசரி அளவான 30-40 பைசா லாபம், 22-25 பைசா அளவையும் தாண்டி குறையும், இதனால் டெலிகாம் நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும் எனப் பிரதமர் அலுவலகத்தின் தலைமை செயலாளர் நிர்பென்திர் மிஸ்ராவிற்கு செல்லூலார் ஆப்ரேட்டார்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா(COAI) கடிதம் எழுதியது.
 
ஜியோ தாக்கத்தால் வாய்ஸ் கால் வருமானத்தில், டெலிகாம் நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
 
COAI அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை, தற்போது மொத்த டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் இன்கம்பிங் மற்றும் ஆவுட்கோயிங் கால் எண்ணிக்கை 1:1 ஆக உள்ளது. சந்தையில் ஜியோவின் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைப்பின் மூலம் இதன் அளவு 10:1 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தச் சில வாரங்களில் இதன் அளவு 15:1ஆக உயர்ந்தாலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
 
இண்டர்கனெக்ஷன் பாயின்ட்:  
 
தன் நெர்வொர்கில் இல்லாத ஒரு வாடிக்கையாளருக்கு தன் நெர்வொர்க் வாடிக்கையாளருக்கு ஏற்படுத்தும் இணைப்பு தான் இந்த இண்டர்கனெக்ஷன் பாயின்ட். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வாடிக்கையாளர் கால் செய்யும் போதும் செய்யப்படும் இணைப்பு தான் இண்டர்கனெக்ஷன் பாயின்ட்.
 
இந்தியாவில் முழுமையான டெலிகாம் சேவைக்கு ஏற்ற நெட்வொர்க் வசதிகள் இல்லாமல் இருக்கும் ஜியோ நிறுவனத்திற்கு எப்படி இண்டர்கனெக்ஷன் பாயின்ட் வழங்க முடியும் எனத் தெரிவித்து ஜியோ கோரிக்கைக்கு முழுமையான மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் ஜியோ நெட்வொர்க் (மொபைல் டவர்) வைத்திருக்கும் சில இடங்களுக்கு மட்டும் அனைத்து டெலிகாம் நிறுவனங்கள் இண்டர்கனெக்ஷன் பாயின்ட் வழங்கியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்