லக்ஷ்மி விலாஸ் வங்கி தொடர்ந்து பலருக்கு கடன் கொடுத்ததாலும், அந்த கடன் பாக்கிகள் இன்னும் சரியாக வந்து சேராததாலும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சமீபத்தில் லக்ஷ்மி விலாஸ் வங்கி நிர்வாகிகள் சிலர் ஊழல் குற்றசாட்டில் சம்பந்தப்பட்டிருப்பது வங்கிக்கு மேலும் பின்னடைவை தந்திருக்கிறது.
இதுப்போன்று நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது சிறப்பு கவனத்தில் எடுத்து செயல்பாடுகளை கவனிப்பது வழக்கம். அதன்படி ரிசர்வ் வங்கி லக்ஷ்மி விலாஸ் வங்கியின் மீது அவசர கால நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் பெரிய நிறுவனங்களுக்கோ அல்லது தனி நபருக்கோ அதிகளவிலான கடன்களை அந்த வங்கியால் கொடுக்க முடியாது. புதிய கணக்கு தொடங்குதல், பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் ஆகியவற்றிற்கு எந்த பிரச்சினைகளும் இருக்காது. தொழில் முதலீட்டு கடன்கள் குறிப்பிட்ட அளவு வரையில் பெறவும் முடியும்.