இனியும் இலவசமா? முடியவே முடியாது கைவிரித்த ஜியோ!!

புதன், 25 ஜனவரி 2017 (10:06 IST)
ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சலுகைகள் மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகும் ஜீன் வரை சில நிபந்தனைகளுடன் நீட்டிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின.


 
 
ஆனால், தற்போது சலுகைகள் மார்ச் 31 வரை மட்டுமே வழங்கப்படும் அதற்கு மேல் இலவசங்கள் இல்லை என்று ஜியோ நிறுவன உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. வாய்ஸ் கால், டேட்டா ஆகிய அனைத்து சேவைகளும் இலவசமாய் வழங்கிவருகிறது.
 
ஜியோ சேவை தொடங்கப்பட்டபோது ’வெல்கம் ஆஃபர்’ என்ற பெயரில் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையில் இலவசம் வழங்கப்பட்டது.
 
பின்னர் ’ஹேப்பி நியூ இயர் ஆஃபர்’ என்ற பெயரில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரையில் இச்சலுகை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இது மேலும் ஜூன் மாதம் வரையில் நீட்டிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின.
 
ஆனால் ஜியோ சலுகை மார்ச் மாதம் வரையில் மட்டுமே என்று ஜியோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இனி ஜியோ தனது சேவைகளுக்காக கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்