ஏர்டெல் பேமெண்ட் வங்கியிலும் பணம் எடுக்கலாம்!!

வியாழன், 15 டிசம்பர் 2016 (14:11 IST)
இந்தியாவின் முதல் பேமண்ட் வங்கிச் சேவையை ஏர்டெல் நிறுவனம் ராஜஸ்தானில் தொடங்கியது.


 
 
இதன் மூலம், இனிமேல் ஏர்டெல் ஸ்டோர்களில் வங்கிக்கணக்குகளை துவக்க முடியும். இந்த ஏர்டெல் ஸ்டோர்கள் இனி வங்கி சேவை மையங்களாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. 
 
மேலும், முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.25% வட்டி, ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு, ஏர்டெல் டூ ஏர்டெல் 100 நிமிட இலவச அழைப்புகள்  வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது ஏர்டெல் நிறுவனம். 
 
இந்நிலையில், ஏர்டெல் பேமெண்ட் வங்கியில் பணம் எடுக்கும் பட்சத்தில் 0.65 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். அதே சமயம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது  என ஏர்டெல் தெரிவித்திருக்கிறது.
 
ராஜஸ்தானை தொடர்ந்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இந்த பேமெண்ட் வங்கி செயல்பட தொடங்கியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்