தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா??

திங்கள், 24 அக்டோபர் 2016 (13:23 IST)
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்ட சவரன் தங்க பத்திரத்தின் ஆறாவது பகுதி இன்று விற்பனைக்கு வந்துள்ளது. 

 
ஆறாவது பகுதி விற்பனையில் கிராம் தங்கத்திற்கு 50 ரூபாய் சலுகை விலையை அளித்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் இந்த 6வது பகுதி விற்பனையில் நிலையான விலையாக 2,957 ரூபாயாக அறிவித்துள்ளனர்.
 
2016-2017 ஆண்டுக்கான சலுகை:
 
இந்தியா புல்லியன் மற்றும் ஜுவல்லர்ஸ் சங்கம் லிமிடெட் (IBJA) 2016 அக்டோபர் 17 முதல் 21 ஆம் தேதிகளில் வெளியிட்ட கிராம் 3,007 ரூபாய் என்ற விலையைப் பொருத்து இந்த 999 சுத்தமான தங்கத்தின் விலை முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்திய அரசும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவும் இணைந்து சவரன் தங்கப் பத்திரத்தில் இந்த 50 ரூபாய் சலுகை விலையை அறிவித்துள்ளனர். தங்கப் பத்திர விற்பனை அக்டோபர் 24 முதல் நவம்பர் 02 ஆம் தேதி வரை வாங்கலாம்.
 
சவரன் தங்க பத்திர திட்டம்: 
 
சவரன் தங்க பத்திர திட்டம் நேரடி தங்கத்தை வாங்குவதைக் குறைத்து பத்திரங்கள்ளக வாங்க மத்திய அரசால் 2015 நவம்பர் மாதம் துவங்கப்பட்டது. 
 
இதனால் முதலீட்டாளர்கள் நேரடியாகத் தங்கத்தை வாங்காமல் பத்திரங்கள் மூலம் முதலீடு செய்யலாம்.
 
இத்திட்டம் துவங்கப்பட்டு ஐந்து பகுதிகளாக பத்திரங்கள் பட்டுவாடா செய்யப்பட்டதில் இருந்து 3,060 கோடி முதலீட்டை அரசு பெற்றுள்ளது. 
 
இந்திய அரசின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கி பத்திரங்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
 
முதலீட்டு காலம்:
 
இந்தப் பத்திரங்களின் அதிகபட்ச காலம் 8 ஆண்டுகள், இடையில் வெளியேற விரும்பினால் 5 வருடங்களுக்குப் பிறகு வெளியேற இயலும்.
 
முதலீடு:
 
பத்திரங்களை வாங்கு போது அதிகபட்சம் 20,000 ரூபாய் பணத்தை நேரடியாகவே அல்லது டிமேட் டிராப்ட், செக் அல்லது மின்னணு வங்கி சேவைகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 
 
ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக 500 கிராம்கள் வரை இத்திட்டத்தின் கீழ் ஒருவரால் முதலீடு செய்ய இயலும். 
 
ஒரு வேலை ஜாயிண்ட் கணக்குகளாக இருந்தாலும் 500 கிராம்கள் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்