ஏர்டெல் சர்ப்ரைஸ்; 24 மணி நேரத்தில், 60 ஜிபி இலவச டேட்டா: எப்படி பெறுவது??
திங்கள், 18 செப்டம்பர் 2017 (14:35 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் சலுகை என்ற பெயரில் 3 மாதங்களுக்கு 30 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கிவந்தது.
இரண்டு முறை ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட இந்த சலுகை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இலவச டேட்டாவை பெற:
# உங்கள் ஸ்மார்ட்போனில் மை ஏர்டெல் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
# அதில் உங்களது போஸ்ட்பெயிட் மொபைல் எண்ணை பதிவு செய்து, அதனை OTP மூலம் உறுதி செய்ய வேண்டும்.
# ஏர்டெல் ஹோம் பக்கத்தில் இருக்கும் (Enjoy Live Shows With FREE DATA) விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டும்.
# பின்னர் ஏர்டெல் டிவி ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
# இவ்வாறு செய்தால் 24 மணி நேரத்தில் 60 ஜிபி இலவச 3ஜி\4ஜி டேட்ட கணக்கில் சேர்க்கப்படும்.
குறிப்பு:
# இந்த சலுகை மார்ச் 2018 வரை வழங்கப்படுகிறது.
# பயன்படுத்தபடாத அந்த மாத டேட்டா அடுத்த மாதத்திலும் பயன்படுத்த முடியும்.