ரிலையன்ஸுடன் கைக்கோர்த்த ஏர்செல் நிறுவனம்

புதன், 14 செப்டம்பர் 2016 (19:36 IST)
ஜியோ அறிமுகம் மூலம் மீண்டும் பிரபலமடைந்த ரிலையன்ஸ், இந்தியாவில் 4G சேவையில் புரச்சி ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைந்தனர்.


 

 
ஜியோ அறிமுகம் மூலம் மீண்டும் பிரபலமடைந்த ரிலையன்ஸ், இந்தியாவில் 4G சேவையில் புரச்சி ஏற்படுத்தி மற்ற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கு அதிர்ச்சி மற்றும் பயத்தை கொடுத்தது. தற்போது முன்கூடிய அறிவித்தப்படி ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைந்தனர்.
 
ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜியோ சேவை மூலம் 4G இணையதளம் வழங்க போவதாக அறிவித்த போதே, ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட போவதாக அறிவிப்பை வெளியிட்டது.
 
ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டுமே 50 சதவீத பங்குகளை கொண்டிருக்கும். இரு நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடி. அறிவிப்புக்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து இரு நிறுவனங்களும் இணைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்