தை திருநாளில் பொங்கல் வைக்கும் முறைகளும் வழிபாடுகளும் !!

Webdunia
சூரியனையே பரம்பொருளாகக் கருதி வழிபடும் தை திருநாளில், பொங்கல் பானையை நல்ல நேரத்தில் வைக்க வேண்டும் என்று மக்கள் கருதுவார்கள். பொங்கல் பானை வைக்கும் நேரமும் பொங்கும் நேரமும் நல்ல யோகமுடைய நேரங்களாக இருக்க வேண்டும் என்பது நம்பிக்கை.

இந்த நாளில், அதிகாலையில் 7:30 மணி முதல் 9:00 மணிக்குள்ளும், காலை 10:30 மணி முதல் 12 மணிக்குள்ளும் பொங்கல் வைத்து வழிபடலாம்.
 
வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் மஞ்சள் கொத்து கட்டிய பானையை கையில் எடுத்து, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட்டு, அதன்பிறகு அடுப்பினை மூன்று  முறை சுற்றி அந்தப் பானையை வைக்க வேண்டும்.
 
பானையில் வண்ணமயமான கோலமிட்டிருப்பது நல்லது. பானை வைக்கும் பொழுது சங்கு ஊதவேண்டும். பின்னர் பால் பொங்கும் பொழுதும், இறைவனுக்கு பொங்கல் படைக்கும் பொழுதும் சங்கு ஊதவேண்டும். மனையில் மங்கலம் பொங்க, பால் பொங்கும் பொழுது "பொங்கலோ பொங்கல்.. மகர சங்கராந்திப் பொங்கல்"  என்றும் சொல்லிப் பலவிதமான காய்கறிகளை குழம்பு வைத்துப் படைத்து வழிபடவேண்டும். சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் வைப்பது  நம்மவர்களின் மரபாகும்.
 
இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக முதல்நாள் சூரிய பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதில் புதுப்பானையில், அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்து  சூரியனுக்கு படைத்து நன்றி தெரிவிக்கப்படும்.

இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் தினத்தன்று, விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் மாடுகளை  அலங்கரித்து பொங்கல் வைத்து அதற்கு உணவு படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மூன்றாவது நாள் உறவுகளை கண்டு மகிழும் விதமாக காணும் பொங்கல்  கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்