தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்தவர்கள், சின்னத்திரைக்கு வருவது தற்போது வழக்கமாகியுள்ளது. இதில் புதிதாக இணைந்துள்ளார் நடிகை நதியா.
ரஜினிகாந்த், பிரபு போன்ற முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் நதியா. திரைத்திரையில் நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருந்த நதியா, தனது திருமணத்துக்குப் பிறகு கணவருடன் லண்டனில் தனது குடும்ப வாழ்க்கையை நடத்தினார். 2 குழந்தைகளுக்கு அம்மா ஆன பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அம்மா வேடங்களில் நடித்து வந்தார்.
இப்போது சின்னத்திரையிலும் அடியெடுத்து வைக்கிறார் நதியா. முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாகும் குரு என்ற தொடரில் நதியாவுடன் சேர்ந்து நடிக்கும் இன்னொரு பிரபலம், நடிகை சமிக்ஷா. இது சாதாரண நெடுந்தொடர்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என்பது நதியாவின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
தொடரை இயக்கும் ராஜா, ஏற்கனவே சிந்துபாத், விக்ரமாதித்யன் போன்ற தொடர்களை இயக்கியவர்.