‌சி‌ன்ன‌த்‌திரை ப‌ற்‌றிய து‌ளிக‌ள்

திங்கள், 5 அக்டோபர் 2009 (15:32 IST)
வணிகம் சம்பந்தமான செய்திகளை வசந்த் டி.வி. தினமும் வழங்கி வருகிறது. தினமும் நான்கு முறை ஒளிபரப்பாகி வரும் செய்திகள் முடியும்போது, வணிகச் செய்திகள் தொடர்கிறது. உலக பொருளாதாரத்திலிருந்து உள்ளூர் வர்த்தகங்கள் வரை அனைத்து வகை வணிக பரிமாற்றங்கள் குறித்த செய்திகளும், பங்குச்சந்தை நிலவரம் குறித்த செய்திகளும் முழுமையாக இடம் பெறுகின்றன.

கே‌‌பி‌ள் டி‌வி ஆபரே‌ட்ட‌ர் ச‌ங்க‌ம் துவ‌க்‌கியு‌ள்ள பாலிமர் டிவியில் விரைவில் எம்.ஜிஆர். மலரும் நினைவுகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உ‌ள்ளது. நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், சின்னி ஜெயந்த் இருவரும் இணைந்து இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சியை வழ‌ங்கு‌கி‌‌ன்றன‌ர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜாக்கூட்டம் தொடரில் 5 நாயகியரில் ஒருவராக வரும் அகிலா, வெள்ளித்திரையிலும் வாய்ப்புக்களை அள்ளிக்கொள்கிறார். நடிப்பு தவிர இவர் செய்யும் காரியம் `பிளாக் அண்ட் ஒயிட்' என்ற நிகழ்ச்சியை நடத்துவது. பழம்பெரும் நடிகர்கள் ாயலில் இருக்கிறவர்களாக தேடிப்பிடித்து அவர்களைக் கொண்டு நடத்தும் நடன நிகழ்ச்சியே பிளாக் அண்ட் ஒயிட் ‌நிக‌ழ்‌ச்‌சியாகு‌ம்.

ஆரோக்கிய உணவை ருசியாக தயாரிக்க பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சி, சாப்பிடலாம் வாங்க.இந்த நிகழ்ச்சியில் விதவிதமான சுவையான, உணவுப் பொருட்களை தயாரிக்கும் விதம் பற்றி, செய்முறை விளக்கத்தோடு விவரிக்கிறார்கள், குடும்பத் தலைவிகள். வசந்த் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்நிகழ்ச்சி.

காலை வேளையில் பெ‌ண்களு‌க்கென்றே ராஜ் டிவி வழங்கும் நிகழ்ச்சி `பெண்.' இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கான சமையல், கைவினைப்பொருட்கள் தயாரிப்பு, அழகுக்குறிப்பு, தொழில், வணிகம், ஆகியவற்றை வழங்குவதோடு, சாதனை செய்த பெண்களின் வாழ்க்கைச் சரித்திரத்தையும் விவரிக்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 ம‌ணி‌க்கு பெ‌ண் ‌நிக‌ழ்‌ச்‌சி துவ‌ங்கு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்