குறு‌ம்ப‌ட‌ங்களு‌க்கான புதிய திரை

சனி, 7 பிப்ரவரி 2009 (12:12 IST)
மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி புதிய திரை.

படைப்பு உலகத்தில் வீரியமாக இயங்கிக் கொண்டிருந்தாலும் ஊடகங்களால் கவனிக்கப்படாத ஒன்று குறும்படங்கள். சமூக அவலங்களையும், மக்கள் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு படைப்பாளிகள் குறும்படங்களை எடுத்துக் கொண்டே இருக்கின்றனர். எ‌த்தனையோ ல‌ட்ச‌க்கண‌க்கான ‌சி‌னிமா‌க்க‌ள் செ‌ய்ய இயலாத கா‌ரிய‌ங்களை குறு‌ம்ப‌ட‌ங்க‌ள் சா‌தி‌த்து‌க் கொ‌ண்டு உ‌ள்ளன.

அப்படிப்பட்ட குறும்படங்களில் சிறந்த படங்களை மக்களுக்கு அடையாளப்படுத்தும் முயற்சிதான், `புதியதிரை'.

குறும்படங்களை திரையிடுவதோடு மட்டுமல்லாமல் அந்த படங்களை இயக்கிய இயக்குனர்களின் நேர்காணலும் இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ஒளிபரப்பப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்