வசந்த் டி.வி.யில் புராதனக் கதைகளில் ஒன்றான லவகுசா தொடராக ஒளிபரப்பாக உள்ளது.
ராமாயணத்தில் சுந்தர காண்டத்திற்கு அடுத்து வருவது உத்தர காண்டம். இந்த காண்டத்தின் முக்கிய நிகழ்வுகள் லவகுசாவில் இடம் பெறுகின்றன.
காட்டில் பிறந்து வளரும் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோரின் வாழ்க்கையையும் சீதையின் பெருமைகளையும் பற்றி கூறுவதாக அமைந்த இந்த தொடரில் நடிகை யுவராணி, சீதையாக நடிக்கிறார்
பல்வேறு தொடர்களை இயக்கியுள்ள கெளரிமனோகர் இந்த தொடரை இயக் குகிறார்.
பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் இந்த தொடர் ஆரம்பமாகிறது.