விஜய் டிவியின் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள்

சனி, 24 ஜனவரி 2009 (11:07 IST)
விஜய் டிவியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்சிகள் ஒளிபரப்பாக உ‌ள்ளன.

காலை 8 மணிக்கு வெற்றி வாசல் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் பிரபலங்களான சொல் வேந்தர் சுகிசிவம், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நீயா? நானா? நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத், ஞானசம்பந்தம் ஆகியோர் வாழ்க்கையில் வெற்றிப் பெறும் வழிகளஎனும் தலைப்பில் தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சினை வழங்க உள்ளனர்.

இதனையடுத்து காலை 9 மணிக்கு சிறப்பு ஆச்சி தமிழ் பேச்சு நிகழ்ச்சி இட‌ம்பெறு‌கிறது.

காலை 10 மணிக்கு, குடியரசு தின சிறப்பு திரைப்படமான - ரிச்சர்டு மதுரத்தின் நடிப்பில் காமராஜ், எ ஃபிலிம் ஆன் தி கிங் மேக்கர் ஒளிபரப்பாகும். சுதந்திர தலைவர் காமராசரின் வாழ்க்கையை தழுவிய கதைதான் இது. காமராஜ‌ரி‌ன் ப‌ள்‌ளி‌ப் பருவ‌ம் முத‌ல், அர‌சிய‌ல் வா‌ழ்‌க்கை, கா‌ங்‌கிர‌ஸ் தலைவரானது, முதலமை‌ச்சரானது வரை அனை‌த்து ‌விஷய‌ங்களு‌ம் அட‌ங்‌கியது இ‌ந்த பட‌ம்.

மாலை 7 மணிக்கு என் தேசமே ‌நிக‌ழ்‌ச்ச‌ி இட‌ம்பெற உ‌ள்ளது. இதில் இந்திய நாட்டிற்கு பெறுமை சேர்த்த சந்திராயன் விண்கல திட்ட மேளாளரான Dr.M.அண்ணாதுரை, சுகுவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல், உலக சதுரங்க சாம்பியனான வி‌‌ஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் தங்களின் வெற்றிப் பாதையைப் பற்றி நேயர்களிடம் பேசுகின்றனர்.

இதனை தொடர்ந்து 7:30 மணிக்கு, கோல்டன் ரகுமான் இடம்பெறுகிறது. சிலம் டாக் மில்லிநியர் திரைப்படத்திற்கான பிரஸ் மீட்டின் தொகுப்புகள் இடம்பெறும்.

webdunia photoWD
இரவு 9 மணிக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008ல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்பெஷல் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் 6 போட்டியாளர்களும் ஏ.ஆர்.ரகுமான் இசையமத்த பாடல்களுக்கு பாட உள்ளனர். இந்த சுற்றின் சிறந்த பாடகருக்கு அவரின் கையொப்பமிட்ட கிட்டார் ஒன்றும் பரிசாக காத்துக் கொண்டிருக்கிறது. யா‌ர் அ‌ந்த அ‌தி‌ர்ஷ‌்டசா‌லி எ‌ன்பதை ஜனவரி, 26, 2009 அன்று இரவு 9 மணிக்கு தெரிந்துகொ‌ள்ளு‌ங்க‌ள்.