மா‌ட்டு‌ப் பொ‌ங்க‌ல் ‌சிற‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள்

ஜனவரி 15, 2009 ‌வியாழ‌க்‌கிழமை மா‌ட்டு‌ப் பொ‌ங்க‌ல் ப‌ண்டிகையை ஒ‌ட்டி ‌‌விஜ‌ய் டி‌வி வழ‌ங்கு‌ம் ‌சிற‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள்.

காலை 8 மணிக்கு பிரிமியர் சிறப்பு பட்டிமன்றம் இடம்பெறும். லியோனியின் தலைமையில் நமது சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணமாக இருப்பது பாரம்பரியம் மிக்க பழமையா அல்லது மாறி வரும் புதுமையா எனும் தலைப்பில் விவாதம் நடைபெறும்.

காலை 9 மணிக்கு லையன் டேட்ஸ் சிரப் நீயா? நானா? நிகழ்ச்சியில் பட்டிகாடா பட்டணமா எனும் தலைப்பில் கோபிநாத்தின் தலைமையில் ஒரு காரசாரமான விவாதம் நடைபெறும்.

இதனையடுத்து காலை 10 மணிக்கு நடிகை த்ரிஷா பங்குபெறும் விவெல் அழகிய சின்டிரல்லா இடம்பெறும். த்ரிஷா தனது திரைப்படங்கள், நண்பர்கள், விருப்பு - வெறுப்புகள் ஆகியவற்றை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன், சிம்பு மற்றும் இயக்குனர் தரணி ஆகியோர் வந்து சிறப்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னனி பாடகர்கள் சின்மயி, கிரிஷ், நிகில் மாத்யூ ஆகியோரின் சிறப்பு பங்கேற்பு‌ம் இதில் இடம்பெறும். மைகெல்-ஹேமா ஜோடியின் சிறப்பு நடனம் இடம்பெறும்.

மதியம் 1 மணிக்கு புன்னகை அரசி ஸ்நேகா, பலவித த்ரில்லிங் அனுபவங்களை ஸ்மைலி ஸ்நேகாவில் அளிக்க உள்ளார். இவரை ரைஃபில் ஷுட்டிங்‌கி‌ல், பாறை ஏறுதல், ஸ்குபா டிரைவிங் போன்ற வீர செயல்களை இவர் புரியவுள்ளார். வாரணம் ஆயிரம் புகழ் திவ்யா ஸ்பந்தனாவுடன், டார்லிங் டார்லிங் திவ்யா மதியம் 1:30 மணிக்கு ஒரு நேர்கானல் இடம்பெறும்.

மதியம் 2 மணிக்கு நான் ஆரியா நிகழ்ச்சியில் நடிகர் ஆரியா நடித்து வெளிவர தயாராகயிருக்கும் நான் கடவுள் திரைப்படத்தைப் பற்றிய அரிய தகவல்கள், அதில் நடித்த அனுபவங்கள் முதலியவற்றை இவர் நேயர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார்.

மதியம் 3 மணிக்கு சென்னை விருந்து இடம்பெறும். சென்னையில் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சியில் கலையுலக பிரமுக‌ர்கள் பலர் பங்குபெற்றனர். இதில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு சிரிதும் பஞ்சமில்லாமல் சின்னத்திறை நட்சத்திரங்கள் பலர் பங்குபெறுகின்றனர்.

மாலை 6 மற்றும் 6:30 மணிக்கு திரைக்கு வரவிருக்கும் திரைப்படங்களான டாக்சி 4777, வில்லு ஆகிய திரைப்படங்களின் சிறப்பு கண்ணோட்டம் இடம்பெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்