இறு‌தி‌யி‌ல் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

வெள்ளி, 9 ஜனவரி 2009 (18:02 IST)
webdunia photoWD
தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு உணர்வு. தமிழ் மொழிக்கு மரியாதை செலுத்தும் வகையில் விஜய் டிவி "தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு" எனும் தமிழகத்தின் சிறந்த பேச்சாளரை தேர்வு செய்யும் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது.

கோவை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் சென்னை ஆகிய 6 இடங்களில் சிறந்த தமிழ் பேச்சாளருக்கான வலை வீசப்பட்டது.

6 மண்டலங்களிலிருந்து சுமார் 200 பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக 30 பேரை மட்டும் தேர்ந்தெடுத்தனர். 'பழமொழிக் குட்டிக்கதை', 'காட்சிக்கு பேச்சு சுற்று', 'பட்டிமன்றம் சுற்று', 'சிலேசை', 'ஓவியச் சுற்று', 'வாதம் விவாதம்', 'அரசியல் விவாத மேடை', 'மக்கள் மனசு சுற்று' போன்ற புதிய பல சுற்றுக்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

webdunia photoWD
மேலும் நெல்லைக் கண்ணன் இந்நிகழ்ச்சியின் நடுவராக இருந்து சிறப்பித்துள்ளார். இவரோடு நெல்லை ஜெயந்தா, இலக்கியவாதி நாஞ்சில் சம்பத், நக்கீரன் கோபால், நடிகர் சிவகுமார், பாராளுமன்ற உருப்பினர்களான வசந்தி ஸ்டான்லி, மலைச்சாமி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு நடுவர்களாக பங்குபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுப் போன்ற பேச்சாளர்களை அறிமுகப்படுத்தி, இவர்களின் தமிழ் ஆற்றலை சோதித்து இறுதியாக ஒருவர் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளராக உருவெடுக்க உள்ளார்! இவருக்கு சிறந்த பேச்சாளருக்கான விருதை தவிற ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் கிடைக்கும்.

இறுதிப் போட்டி மாபெரும் அளவில், பிரம்மாணட மேடையில், 500க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வமுள்ள மாணவர்களின் முன்னிலையில் அண்ணா கலையரங்கத்தில் மூத்த தமிழ் அறிஞர்கள், தமிழ் சான்றோர்கள், ஆன்றோர்கள், தமிழ் பெராசிரியர்கள் ஆகியோரின் முன்னனியிலும் நடைப்பெற்றது.

விஜயன், அருள் பிரகாஷ், அபிராமி ஆகியோரே இறுதி சுற்றின் போட்டியாளர்கள். இவர்களில் ஒருவருக்குதான் வெற்றி மகுடம் மட்டும் 5 லட்சம் பரிசுத் தொகை
.
webdunia photoWD
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் தமிழண்ணல், தவத்திரு பொன்னம்பல அடிகளார், ந‌ன்னன் ஆகியோர் பங்குபெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

நிகழ்ச்சியை புஷ்பவணம் குப்புசுவாமி தமிழ் மொழியின் சிறப்பை பறை சாற்றும் விதமாக நாட்டுப்புற பாடல்களை பாடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அவர் பாடிக் கொண்டிருக்கும் போதே அருகில் ஓவியரான நெடு‌ஞ்செ‌‌ழிய‌ன் மிகச் சிறப்பாக திருவள்ளுவவரின் உருவத்தை வரைந்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்ச்சியை தொகுத்து விழங்கினார் பிரபல கவிஞரான சினேகன்.

மூன்று இறுதி சுற்று போட்டியாளர்களும் முதலில், "தமிழன்... நேற்றி, இன்று, நாளை" எனும் தலைப்பின் கீழ் பேச அனுமதிக்கப் பட்டனர். ஒவ்வொரு போட்டியாளரும் பேச தலா 15 நிமிடம் வழங்கப்பட்டது. இவர்கள் பேசி முடித்த பின்னர் அங்கு அமர்ந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள், பத்திரிகையாளர் நக்கீரன் மற்றும் பார்வையாளர்கள் மூன்று போட்டியாளர்களின் பே‌ச்சுத் திறமையை மதிப்பிட வாக்குகள் அளித்தனர். அதிகமாக வாக்குகள் பெற்று, அருள் பிரகாஷ் மற்றும் விஜயன் இரண்டாம் கட்ட இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

webdunia photoWD
இரண்டாம் கட்ட இறுதிப் போட்டியில் இந்த இருவருக்கும் "நாடு எங்கே போகிறது" எனும் தலைப்பில் பேசும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இறுதியில் சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள் ஆகியோரின் வாக்கெடுப்பின் மூலம் "ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" - தமிழகத்தின் சிறந்த பேச்சாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அண்ணா கலையரங்கத்தில் இறுதி சுற்று நடந்ததின் தொகுப்புகள் மற்றும் வெற்றியாளர் யார் என்பதும் ஜனவரி 11, 2009 காலை 9 மணிக்கு "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில்"ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடதக்கது.